Saturday, April 5, 2008

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்?????

இரு மாநில மக்கள் மனதிலும், பற்ற வைத்திருக்கிற பிரச்சினை.. இந்த குடி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கர்நாடகத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விட போகிறது?? ??? என்று என்னுடைய எல்லா தமிழ்ர்களின் மனதிற்குள்ளும் கேள்விக்கணைகள் எழுகின்றன... கர்நாடகாவில் வாழும் தமிழ்ர்கள் அநியாயமாக தாக்கப்படுகிறார்கள்.. தமிழ் சங்கத்தில் உள்ள தமிழ் எழுத்துகள் அழிக்கப்படுகின்றன.. பத்திரிகை அலுவலகங்களும் தாக்கப்படுகின்றன...
பதிலுக்கு நம்மவர்களும் சும்மா இருக்கவில்லை.. கர்நாடக பஸ் ஒன்று ஓசூரில் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது... போதாக்குறைக்கு நம்முடைய திரைப்படத்துரையினரின் உன்னாநிலை போராட்டம் வேறு.., அன்றைய தினம் சேப்பாக்கத்தில் நடிகர்களை காணவந்த கூட்டம்தான் அதிகமாம்..
இப்போது ஒகேனக்கல் பிரச்சினையில், கர்நாடக தேர்தல் முடியும் வரை அமைதி காப்போம் என்றும், அதன் பிறகு தேவைப்பட்டால் களம் புகுவோம் என்றும் தமிழினத்தின் மூத்த தலைவர் அறிவித்திருக்கிறார். ... இனிமேல் இந்த போராட்ட பிரச்சினை சிறிது நாளைக்கு தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது...
தமிழ்கத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தை கர்நாடகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பது ஏன்?
காலம் காலமாக கர்னாடகாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி பிரச்சினைன் காலம் காலமாக இருந்து வருவது அறிந்ததே...... அப்படி இருக்கும்போது ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேறி விட்டதாக வைத்து கொள்வோம்.. அப்படி அது நிறைவேறும் பட்சத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடி நீருக்காக அது பயன்பட போகிறது...
காவிரி நடுவர் மன்றத்தில் இது தொடர்பான கருத்துக்களை தமிழகம் வைக்கும்... ''நதி நீர் குறித்த பயன்பாட்டில் குடி நீருக்கு அதிகமாக முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் " அதன் பிறகுதான் அந்த நீரை விவசாயத்திற்கோ, மற்ற தேவைகளுக்கோ பயன் படுத்தலாம் ... என்பதுதான் அந்த விதி... இப்போது புரிந்திருக்குமே கர்நாடகத்தினர் எதற்கு பயப்படுகிறார்கள் என்று...