Sunday, July 6, 2008

முனியாண்டியும் மாட்டிக்கிட்ட நாங்களும்...

வழ்க்கமாக சினிமா பார்ப்பது எனக்கு பிடிக்காது ... நட்புக்களின் வற்புறுத்தலின் பேரில் நேற்று ஒரு படத்துக்கு புறப்பட்டோம். வேலை முடிந்ததும் சரியாக சாப்பிட கூட விடாமல் ஓடு ஓடு என்று வேகமாக வண்டியை எடுத்திட்டு போய் சேர்ந்தோம் ... ஒரு டிக்கெட் விலை எழுபத்து ஐந்து ரூபாய்..நாங்கள் மொத்தம் ஐந்து தலைகள்... பார்க்க சென்ற படத்துக்கு டிக்கெட் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் இன்னொரு படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு உள்ளே போய் உட்கார்ந்தாச்சு ...
முனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் - இதுதான் படத்தோட பெயர் .... படத்தின் நாயகன் பரத்... டைட்டில் கார்டில் சின்னத் தளபதி என்ற அடைமொழி வேறு
எடுத்த எடுப்பிலே தென்னந்தோப்பு புடை சுஉல வீற்றிருக்கும் முனியசாமி கோவிலை காட்டுகிறார்கள்.. ஆஹான்னு நிமிர்ந்து உட்கார்ந்தோம் ... படத்துல டைரக்டர் புதுசா ஏதோ செய்ய போறாருன்னு நம்பி உட்கார்ந்திருந்தோம் ...
படத்துல நம்ம பரத், விலங்கியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்... கல்லூரிக்கு வரும் அவர் வழ்க்கமா நம்ம ஊர் கதாநாயகன்கள் செய்ற தலையாய கடமையை செய்றாரு.... வழாக்கம் போல அந்த ஊருக்கு ஒரு பெரிய மனிதர்... அவருடைய பெண்ணாக கதை நாயகி... அப்புறம் என்ன நம்ம பரத் கதா நாயகி பூர்நாவை காதலிக்கிறார்... ஆனால் கதாநாயகி சும்மா சுத்த விடுறதுக்காக பரத்தை அலைய விடுகிறாள்...
வழ்க்கமான கதையாத்தானே இருக்கு... திருமுருகன் நம்மளை ஏமாத்த மட்டாறேனு நினைக்கிற டைம்ல ... வில்லனோட அடியாட்கள், பரத் படிக்கிற காலேஜுக்குள்ள புகுந்து அடிக்கிறாங்க .. ஆஹா , சின்னத்தலபதிக்கு வாய்ப்பு கொடுத்தாங்கன்னு பார்த்தா அவரு கதாநாயகி மேல விழுற ஒவ்வொரு அடியையும் தாங்குறாரு... இப்பவே கன்னைக்கட்டுதேனு அடுத்த காட்சியை நினைக்கும் போதே அங்க வைக்க்ராருயா டைரக்டர் ஒரு டூயட் பாட்டு... என்ன ஒரு லாஜிக்... சுத்தி வில்லன் ஆட்கள் ஒவ்வொருத்தரையும் அடிச்சு நொறுக்க கதாநாயகியும், கதா நாயகனும் கல்லூரி லேப்ல பாட்டு பாடுராங்கலாம்... அதையும் பொறுத்தாச்சு...
ஆனால் தாங்க முடியாத ஒரு கொடுமை ... அது முனி முனி என்று பரத் அப்பாவாக வரும் பொன்வண்ணன் வரும் காட்சிகளில் எல்லாம் அரங்கம் அதிர்ந்தது...''

Thursday, June 12, 2008

கட்சிகளின் பிடியில் மக்களா??

தொடங்கிட்டாருயா, தொடங்கிட்டாரு... கார்த்திக் கட்சி தொடங்கிட்டாரு.. இனிமே காவிரி நீர் பிரச்சினை முதல் முல்லைப்பெரியாறு அனை வரை எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும்.. அகில இந்திய நாடாளுமன்ற கட்சி .... இனிமேல் தமிழில் இருக்கிற அத்தனை எழுத்துக்களையும் வச்சு நம்ம மக்கள் கட்சி தொடங்கிடுவாங்க... ஆனால் பாவங்க நம்ம வாக்காளர்கள்... தமிழ்நாட்டில் இருக்கும் இத்தனை கட்சிகளையும் அதன் சின்னங்களையும் நினைவு வைத்து கொண்டு வாக்களிக்கிரார்களே உண்மையில் தமிழன் பெரிய ஆள்தான்....
நம்ம நடிகை சதா பாணியில '' போயா போ '' னு தான் சொல்ல தோணுது....
---------------i

Saturday, June 7, 2008

குட்டி

"குட்டி" இந்த வார்த்தை சில சமயங்களில் எனக்கு பிடிக்காமல் போய் இருக்கிறது.. நான் வீட்டில் கடைக்குட்டியாக பிறந்ததினால் வந்த பெயர் காரணம்... வளர வளர அதுவே சில நேரங்களில் இடைஞ்சலாக, ஒரு நெருடலை தனது என்னவோ உண்மை... பள்ளியில் ஒரு பெயர்... வீட்டில், சொந்தங்களிடத்தில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் 'குட்டி" என்ர பெயர்தான் பரிச்சயம்.. வீட்டுக்கு என்னைத்தேடி வரும் நண்பர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்தது ''குட்டி"
பள்ளி, கல்லூரி என்று காலங்கள் உருண்டோட குட்டி மறைந்து கொண்டே வந்தது... வேலைக்காக வேறு ஊருக்கு வந்ததும் ''குட்டி" முற்றிலுமாக மறைந்து விட்டது.... ஆனால் இப்போது சில சமயங்களில் மனதில் தோன்றும்... ''குட்டி" என்று நம்மை யாரவாது கூப்பிட மாட்டார்களா என்று... அந்த ஆற்றாமை கண்ணீரையும் வரவழைக்கிறது....

Saturday, April 5, 2008

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்?????

இரு மாநில மக்கள் மனதிலும், பற்ற வைத்திருக்கிற பிரச்சினை.. இந்த குடி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் கர்நாடகத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விட போகிறது?? ??? என்று என்னுடைய எல்லா தமிழ்ர்களின் மனதிற்குள்ளும் கேள்விக்கணைகள் எழுகின்றன... கர்நாடகாவில் வாழும் தமிழ்ர்கள் அநியாயமாக தாக்கப்படுகிறார்கள்.. தமிழ் சங்கத்தில் உள்ள தமிழ் எழுத்துகள் அழிக்கப்படுகின்றன.. பத்திரிகை அலுவலகங்களும் தாக்கப்படுகின்றன...
பதிலுக்கு நம்மவர்களும் சும்மா இருக்கவில்லை.. கர்நாடக பஸ் ஒன்று ஓசூரில் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது... போதாக்குறைக்கு நம்முடைய திரைப்படத்துரையினரின் உன்னாநிலை போராட்டம் வேறு.., அன்றைய தினம் சேப்பாக்கத்தில் நடிகர்களை காணவந்த கூட்டம்தான் அதிகமாம்..
இப்போது ஒகேனக்கல் பிரச்சினையில், கர்நாடக தேர்தல் முடியும் வரை அமைதி காப்போம் என்றும், அதன் பிறகு தேவைப்பட்டால் களம் புகுவோம் என்றும் தமிழினத்தின் மூத்த தலைவர் அறிவித்திருக்கிறார். ... இனிமேல் இந்த போராட்ட பிரச்சினை சிறிது நாளைக்கு தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது...
தமிழ்கத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தை கர்நாடகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பது ஏன்?
காலம் காலமாக கர்னாடகாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி பிரச்சினைன் காலம் காலமாக இருந்து வருவது அறிந்ததே...... அப்படி இருக்கும்போது ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேறி விட்டதாக வைத்து கொள்வோம்.. அப்படி அது நிறைவேறும் பட்சத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடி நீருக்காக அது பயன்பட போகிறது...
காவிரி நடுவர் மன்றத்தில் இது தொடர்பான கருத்துக்களை தமிழகம் வைக்கும்... ''நதி நீர் குறித்த பயன்பாட்டில் குடி நீருக்கு அதிகமாக முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் " அதன் பிறகுதான் அந்த நீரை விவசாயத்திற்கோ, மற்ற தேவைகளுக்கோ பயன் படுத்தலாம் ... என்பதுதான் அந்த விதி... இப்போது புரிந்திருக்குமே கர்நாடகத்தினர் எதற்கு பயப்படுகிறார்கள் என்று...